- Advertisement -
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
மலையாள திரை உலகில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும், மக்கள் பட்ட துயரங்களையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. மலையாளத்தில் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதுவரை மலையாள சினிமாவில் எந்த திரைப்படமும் செய்யாத வசூலை 2018 திரைப்படம் வசூலித்தது.
இதையடுத்து, டொவினோ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் நடிகர் திலகம். டிரைவிங் லைசென்ஸ் என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் லால் ஜெ ஆர் இப்படத்தை இயக்குகிறார். இதில் டொவினோவுடன், பாவனா, சௌபின் சாகிர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரேற்பை பெற்றது
As we wrap up the incredible journey of creating NADIKAR THILAKAM, we want to express our deepest gratitude to every artist and technician involved in this project. Over three years, we embarked on a thrilling adventure, shooting across 30 unique locations—from Dubai and… pic.twitter.com/ZtjAfm8q8c
— Tovino Thomas (@ttovino) January 6, 2024
