வருண் தவான் நடிக்கும் பேபி ஜான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தெறி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய், சமந்தா, பேபி நைனிகா, எமி ஜாக்சன் போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இந்நிலையில் இந்த படமானது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதன் இந்தி ரீமேக் படத்திற்கு பேபி ஜான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லீ தான் தயாரித்து வருகிறார். மேலும் ஜீவாவின் கி படத்தை இயக்கிய காலிஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படமானது 2024 டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.