SK 24 படத்தால் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கப்போவதாகவும் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று வெங்கட் பிரபுவே அப்டேட் கொடுத்திருந்தார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் எனவும் கூறியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ‘பராசக்தி’ படத்தை முடித்த சிவகார்த்திகேயன், அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தன்னுடைய 24 ஆவது படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த புதிய படமானது வருகின்ற நவம்பர் மாதம் 22 அல்லது 23ஆம் தேதி தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இதன் மூலம் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஏனென்றால் ஆரம்பத்தில் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படம் நவம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் SK 24 படம் தொடங்குவதை பொருத்துதான், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடங்குவது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்குமா? அல்லது அதன் பிறகும் தள்ளிப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


