நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி நடிகர் ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இத்திரைப்படத்தை 2024 அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) காலை பகத் பாஸிலின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து படத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில் ஆகியோர் காணப்படுகின்றனர். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.