நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லன்களாக அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அஜித்தின் 62 வது படமான இந்தப் படத்தை மீகாமன் தடம் தடையற தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வரும் நிலையில் ஓம் பிரகாஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70% படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதுமட்டுமில்லாமல் விடாமுயற்சி திரைப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி, நடிகர் அஜித், ஆரவ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -