Homeசெய்திகள்சினிமாஅஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் ரெடி... விடாமுயற்சி அப்டேட்...

அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் ரெடி… விடாமுயற்சி அப்டேட்…

-

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றம் வரும் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். தொடக்கத்தில் விக்னேஷ் சிவன் அஜித்தை இயக்குவதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. தடையறத் தாக்க, தடம், கழகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. இதற்காக, விடாமுயற்சி பட குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். அங்கு மூன்று மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஹுமா குரேசி, ஆரவ் சஞ்சய்தத் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றம் வரும் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் நடிக்கும் தளபதி68 படத்தின் முதல்தோற்றமும் புத்தாண்டு அன்று வெளியாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ