- Advertisement -
விஜய் சேதுபதி மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்தப் படத்தை மறைந்த இயக்குனர் SP ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இறுதியாக இந்தப் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மே 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.



