Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து பட தோல்வி... அதிரடி மாற்றங்கள் செய்த விஜய் தேவரகொண்டா...

அடுத்தடுத்து பட தோல்வி… அதிரடி மாற்றங்கள் செய்த விஜய் தேவரகொண்டா…

-

தெலுங்கில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் தன் திறமையால் மட்டுமே, இன்று இந்தியாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி பின்னர் டோலிவுட் திரையில் அறிமுகமாகினார். அவர் நடித்த பெல்லிசோப்புலூ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து விஜய் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. லிகர் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரித்து இருந்தார். இருப்பினும், இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது. விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் குஷி படம் வெளியானது.

குஷி, லைகர் என அடுத்தடுத்து தோல்வியை தழுவிய படங்களால், இழந்த மார்க்கெட்டை பேமிலி ஸ்டார் படம் மூலம் சரிகட்ட நினைத்தார். ஆனால், இறுதியாக வெளியான பேமிலி ஸ்டார் படமும் தோல்வியைத் தழுவியது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால்,, அவர் மிகவும் சோர்ந்துவிட்டாராம். கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

MUST READ