விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சமீப காலமாக அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 15ஆம் தேதி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாலை நேர பயிலகங்களை தொடங்கியுள்ளார்.
இவ்வாறான செயல்பாடுகளினால் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெறுவது மட்டுமல்லாமல் பொதுமக்களின் ஆதரவையும் பெற்று வருகிறார்.இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் விஜய், புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் விஜய், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து களமிறங்குகிறார் என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.