நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் ஹீரோவாக உருவெடுத்து தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் காமெடி கலந்த கதை களத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு பாகம் 1, தில்லுக்கு துட்டு பாகம் 2 ஆகியவை ஹாரர் காமெடி கதைக்களத்தில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகமாக வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்த நிலையில் அடுத்ததாக டிடி ரிட்டன்ஸ் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறதாம். டிடி ரிட்டன்ஸ் 2 (தில்லுக்கு துட்டு 4) என்று சொல்லப்படும் இந்த படத்தையும் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கப் போகிறாராம். மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் விஜயின் கோட் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சௌத்ரி இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -