spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்.... நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்…. நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!

-

- Advertisement -

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்.... நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஜய். சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்படி நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தினருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகளை செய்து வந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பாதித்தது. பல குடும்பங்கள் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்கும் விஜய்.... நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு!எனவே அவர்களுக்கு ரஜினி போன்ற நடிகர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்திக்க இருக்கிறார். மேலும் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

we-r-hiring

தளபதி 68 படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருந்த விஜய் நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்றைய முன்தினம் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ