இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இளையராஜாவாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமானார். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதனை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் ப்ரோடக்ஷன், மெர்குரி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிவிக்கும் வகையில் விழா என்றும் நடத்தப்பட்டது. அந்த விழாவில் இளையராஜா, தனுஷ், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் படப்பிடிப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இவர் தனுஷும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படத்தை முதலில் கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்க இருந்தாராம். ஒரு சில காரணங்களால் அது அருண் மாதேஸ்வரனுக்கு கைமாறியதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களை எடுக்கும் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் பயோபிக் படத்தை எப்படி எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -