Homeசெய்திகள்சினிமா'வாடிவாசல்' படத்தின் கதாநாயகி யார்?

‘வாடிவாசல்’ படத்தின் கதாநாயகி யார்?

-

- Advertisement -

வாடிவாசல் படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.'வாடிவாசல்' படத்தின் கதாநாயகி யார்?

நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் எனது திரிஷா, நட்டி நடராஜ் , யோகி பாபு மட்டும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 'வாடிவாசல்' படத்தின் கதாநாயகி யார்?இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் இருக்கிறது. மேலும் வெற்றிமாறன், விடுதலை 2 திரைப்படத்தை முடித்து விட்ட நிலையில் அடுத்தது வாடிவாசல் திரைப்படத்தை தான் கையில் எடுப்பார் என நம்பப்படுகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 15 மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாடிவாசல் படம் தொடர்பான அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'வாடிவாசல்' படத்தின் கதாநாயகி யார்?இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா லக்ஷ்மி தான் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஐஷ்வர்யா லக்ஷ்மி ஏற்கனவே கமல்ஹாசனின் தக் லைஃப், சூரியின் மாமன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ