Homeசெய்திகள்க்ரைம்ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி - போலீஸ் அதிர்ச்சி

ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி – போலீஸ் அதிர்ச்சி

-

ஒரு ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி- அதிர்ச்சி அடைந்த போலீஸ்.

ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி - போலீஸ் அதிர்ச்சிகடலூரில் ஒரு ரவுடி வங்கிக் கணக்கிற்கு வந்த இரண்டரை கோடி ரூபாய் வந்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கடலூர் மாவட்டம் பேர் பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.

ரவுடி அசோக் குமார் மீது  கொலை வழக்கு அடிதடி வழக்கு என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவர் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

இந்த வங்கிக்கு கடந்த ஜூலை மாதம் மட்டும் இரண்டரை கோடி ரூபாய் பணம் வந்துள்ளது, 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம், 60 லட்சம் என ஒரே மாதத்தில் 2.50 கோடி வந்ததால் வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.

கனார வங்கி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்த அதே நிலையில் உடனடியாக தன்னுடைய நண்பர்கள் ஏழு பேர் கணக்கிற்கு இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஆன்லைன் மூலம் அசோக் குமார் பணத்தை அனுப்பிவிட்டார்.

50 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் தற்போது உள்ள நிலையில் வங்கி கணக்கினை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் அசோக்குமார் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர் பணம் அனுப்பிய ஏழு பேரிடமும் போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடியின் வங்கிக் கணக்கிற்கு 2.5 கோடி ரூபாய் வந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

MUST READ