spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்!

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்!

-

- Advertisement -

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை என நோட்டீஸ்!சாதாரண எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகை கட்ட சொல்லி நோட்டீஸ்! அதிர்ந்து போனவாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார்(30) என்ற வாலிபர் தனது பெயரில் போலி ஜிஎஸ்டி கணக்கு உருவாக்கி மோசடி செய்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

we-r-hiring

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை என நோட்டீஸ்!

செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமாருக்கு சிந்தாரிபேட்டை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து 22 கோடியே 29 லட்சம் 29ஆயிரத்து 772 ரூபாய் நிலுவை தொகை கட்ட வேண்டிம் என்று நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேந்திரகுமார், கடந்த 2017 ஆம் ஆண்டு மொபைல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த போது தான் வழங்கிய ஆதார்,பான்கார்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு சுரேஷ்குமார் என்பவர் தனது பெயரில் ஜிஎஸ்டி கணக்கு உருவாக்கி மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை என நோட்டீஸ்!

தனது பான்கார்ட் எண்ணை கொண்டு சுரேஷ் அவரது வங்கி கணக்கு எண்,போலி ஒப்பந்த ஆவணம் வைத்து ஜிஎஸ்டி கணக்கு தொடங்கி ஏமாற்றியுள்ளதாக மேலும் புகாரில் தெரிவித்துள்ளார். போலி ஜிஎஸ்டி கணக்கு துவக்கி தன்னை சிக்கலில் மாட்டிவிட்ட சுரேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி மகேந்திரகுமார் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை என நோட்டீஸ்!

பாதிக்கப்பட்ட மகேந்திரகுமார் தற்போது செவ்வாப்பேட்டையில் சிறிதாக எலெக்ரிகல் ஷாப் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்  

MUST READ