அடையாறு ஆற்றில் கொலையான நிலையில் 17 வயது சிறுவன் சடலம்.
போதையில் நண்பர்களிடையே நடந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? குமரன் நகர் போலீசார் விசாரணை. கொலையான நபர் சிறு சிறு வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் பாலம் அருகே அடையாறு கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக குமரன் நகர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் எம்ஜிஆர் நகர் சூளை பள்ளத்தைச் சேர்ந்த, சிறு சிறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய் என்பது தெரிய வந்தது.
அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக சஞ்சயின் குடும்பத்தினருக்கும். போலீசார் தகவல் தெரிவித்தனர்.
சஞ்சயுடன் ஒன்றாக சுற்றித்திரியும் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த (சந்தோஷ், சக்திவேல்) இருவரை பிடித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா என தொடர் விசாரணை நடைபெறுகிறது.