spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

-

- Advertisement -

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலை அருகே கல்லூரி முடித்துவிட்டு காரில் வந்த காதல் ஜோடி காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

அப்போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், தான் மப்டி போலீஸ் என கூறி காதல் ஜோடியிடம் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி தருமாறு மிரட்டியுள்ளார். அருகே உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து இது உங்களுடைய நகைகள் தான் என எழுதி கொடுத்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடிகள் தாங்கள் அணிந்திருந்த செயின் உள்ளிட்ட 7 சவரன் தங்க நகைகளை அந்த நபரிடம் கழற்றி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்கள். பின்னர் நகைகளை திரும்ப பெறுவதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் சென்ற போது தான் அவர்களிடம் நகைகளை பறித்து சென்றது போலி போலிஸ் என்பது தெரியவந்தது.

அதனால் அதிர்ச்சடைந்த காதல் ஜோடி அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.

MUST READ