spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு

-

- Advertisement -

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை! சென்னையில் பரபரப்பு

சென்னை அடுத்த தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Murder

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி.வெங்கடேசன்(33), இவர் மீது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். பி.கேட்டகிரி ரவுடியாக சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், பாஜக பட்டியலின மண்டல் தலைவராக பதவியில் உள்ளார்.

we-r-hiring

இந்த நிலையில் மேற்கு தாம்பரம் குட்வீல் நகரில் உள்ள தனியார் காலி மனைவில் தலையில் பலத்த வெட்டுகாயங்களுடன், முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிரேதமாக கிடந்தார். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவுப்செய்து தடயங்களை சேகரித்த நிலையில் அப்பகுதியில் இரவு முதல் சென்ற வாகனங்கள் குறித்தும் ஆட்கள் குறித்த தகவல்களையும் போலீசார் திரட்டி விசாரணை துவங்கினர்.

மேலும் வெங்கடேசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அந்த தகராறு காரணமாக கடந்த 9ம் தேதி புவனேஷ்குமார், தீபக், சரண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்கள் தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளதால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து தேடிவருகிறார்கள். பாஜக நிர்வாகியும், கொலைவழக்கில் சிறை சென்ற நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ