spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

-

- Advertisement -
kadalkanni

கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு.

கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது சையது சுலைமான் (50) இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இவருக்கு அந்த தெருவில் 2 வீடுகள் உள்ளது. நேற்றிரவு முகம்மது சையது சுலைமான் புதிய வீட்டில் சாப்பிட்டு விட்டு எதிரே உள்ள பழைய வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கியள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் எழுந்து முகம்மது சையது சுலைமான் புதிய வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முகம்மது சையது சுலைமான் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த  துணிகள் களைந்து கிடந்தது மட்டுமின்றி சுமார் 50 பவுன் நகை மற்றும் ரூ.26 லட்சம் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முகம்மது சையது சுலைமான் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார்  விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ