spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை...போலீசாா் வலைவீச்சு...

ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…

-

- Advertisement -

ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/india/neet-entrance-exam-results-released-today/168080சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகின்றாா். ஆந்திரா மாநிலங்களுக்கும் ஏலக்காய், பட்டை, கிராம்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் ஏலக்காய், பட்டை, கிராம்பு வியாபாரம் செய்த பணத்தை  வசூல் செய்வதற்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு சென்றுள்ளாா்.

பின்னர் அங்கிருந்து ரூ.30 லட்சம் பணத்தை வைத்து கொண்டு சென்னைக்கு புறப்பட தயாராகும் போது, விஜயகுமாருக்கு போன் வந்தது. போனில் பேசிய நபா் தான் தங்களது வாடிக்கையாளர் என்று தெரிந்த நபர் போல பேசி உள்ளார். தனக்கு அவசரமாக ரூ. 30 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளாா். மேலும் தான் விஜயவாடாவில் இருப்பதாகவும் இங்கு பணத்தை  கொடுத்தால் சென்னையில் நமது ஆள் இருப்பதாகவும் அங்கு உடனே பணத்தை கொடுத்துவிடுவதாகவும் விஜயகுமாரிடம் கூறியதை  நம்பியுள்ளாா்.

we-r-hiring

உடனே சென்னையிலிருந்த தனது மகனை பெரியமேடு சைடாம்ன்ஸ் சாலைக்கு அனுப்பி அங்கு வந்த அடையாளம் தெரியாத நபரிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து இருந்த பணத்தை பெற்று கொள்ளும்படி விஜயகுமார் தெரிவித்துள்ளார். அவரது மகனும் சென்று பணத்தை வாங்கிய பிறகு தந்தையிடம் தெரிவித்துள்ளாா். இதன் பிறகு விஜயகுமார் ரூ. 30 லட்சத்தை விஜயவாடாவிலிருந்து பேசியவருக்கு பணத்தை கொடுத்துள்ளாா். ரூ. 30 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்ட விஜயகுமாரின் மகன் வீட்டிற்கு சென்று பணத்தை பார்த்த போது அதிா்ச்சியடைந்துள்ளாா். தான் கட்டுக்கட்டாக வைத்திருந்த 500 ரூபாய்க்கு நடுவில் அனைத்தும் வெற்று பேப்பராக இருந்தது தெரிய வந்ததுள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர் தனது தந்தை விஜயகுமாரிடம் தகவல் அளித்துள்ளார். உடனே விஜயகுமாரிடம் பேசிய நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. பிறகு நேற்று சென்னைக்கு வந்த விஜயகுமார் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாாின் அடிப்படையில் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.

முதற்கட்டமாக பணத்தை ஏமாற்றிய கும்பல் வந்த இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஏமாற்றிய நபர் இந்தியில் பேசியதாக தெரிகிறது. போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்து வருகின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…

MUST READ