சிறுமி பாலியல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பெங்களூரு சஞ்சய் நகரில் உள்ள வீட்டில் 17 வயசு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக எடியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் மார்ச் 14 ஆம் தேதி எடியூரப்பா மீது சதாசிவன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் இவ்வழக்கு முறைப்படி விசாரிக்கப்படவில்லை என்றும் வழக்கில் ஆஜராக பிரிவு 41 a யின் கீழ் எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் கூட பிறப்பிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் தாயார் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை மிகவும் மெதுவாக நடைபெறுவதால் நிலை அறிக்கை காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் போக்சோ குற்றச்சாட்டின் கீழ் எடியூரப்பாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிடுமாறும் அதில் முறையிடப்பட்டிருந்தது.
ஜெய் சந்திரபாபு நாயுடு ஜெய் சந்திரபாபு அண்ணகாரு – ஆதரவாளர்கள் முழக்கம் (apcnewstamil.com)
இந்நிலையில் போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு குற்றப் புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. எடியூரப்பா டெல்லியில் இருப்பதாகவும் தங்கள் சம்மனுக்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் சிஐடி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.