Homeசெய்திகள்க்ரைம்ஈரோடு : முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

ஈரோடு : முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

-

ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழில் அதிபர்களிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி நபர் ஒருவர் கைது.

ஈரோடு : முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை !

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர்  காங்கேயம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பேசுவதாக கூறி பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர் தனது மேலாளர் மூலம் 50ஆயிரம் ரூபாய் பணத்தை ஜிபே(G Pay) பண பரிவர்த்தனை மூலம் அனுப்பி உள்ளார். இதன் பின்னர் காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணம் கேட்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த நபர் ஏமாற்றியதை உணர்ந்த நிறுவனத்தின் மேலாளர்  ஈரோடு சைபர் க்ரைம் போலீசாரிடம் ஏப்ரல் 4ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருச்சி பேருந்து நிலையத்தில் உள்ள பண பரிவர்த்தனை கடை எண்ணுக்கு பண பரிவர்த்தனை நிகழ்ந்தது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரனையில் ரவி( 63) ஈரோடு,திருப்பூர்,கோவை,உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ, எம்பி ஆகியோரின் பெயரில் செல்போன் மூலம் பேசி நன்கொடை வேண்டும் என கேட்டு சுமார்  4 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றது தெரியவந்துள்ளது.

இதே போன்று கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்ஜுணன் பெயரில் அங்குள்ள தொழில் அதிபர்களிடம் பணம் வசூல் செய்யதுள்ளார் என்பதை , அவர் இரு இடங்களில் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்றாக இருந்ததை வைத்து இதே நபர்தான் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவி யிடம் இருந்து  போலீசார் 2 செல்போன் ,3சிம் கார்டு மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் செல்போன் அடங்கிய நோட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இதே பாணியில் வேறு யாரிடமும் ரவி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

MUST READ