Homeசெய்திகள்க்ரைம்செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்

செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்

-

செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்தது அம்பலம்.

செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவல் துணைகண்காணிப்பாளர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் புளியங்குடி சரகத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று இரவு புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் ஸ்டாண்ட் பகுதியில் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.நிகழ்விடத்திற்கு அருகே போலீசார் சென்றபோது தகராறு ஈடுபட்ட கும்பல் அவசரமாக காரில் ஏறி ராஜபாளையம் சாலையில் வேகமாக தப்பி சென்றது. உடனடியாக வாசுதேவநல்லூர் சிவகிரி காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட ஆங்காங்கே உஷாரான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் காரை விரட்டிச் சென்ற டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் வாசுதேவ நல்லூர் அருகே காரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓடிய ஆறு பேரையும் காருடன் புளியங்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உள்ளார் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் செந்தமிழ்(19),அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் சதீஷ் (20), சிவகிரி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் அது மகன் கவிக்குமார்(21), அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் கனகராஜ் (22) ஆகிய நான்கு பேருடன் இளஞ்சிரார்கள் இருவர் (17 வயது) இருப்பதும் தெரிய வந்தது.

ஆறு பேரையும் காவல் நிலையத்தில் வைத்து முறைப்படி மேலும் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் சிவகிரி பகுதியில் கிண்டர் ஆப் என்னும் செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து மிரட்டி அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் உடைமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடிப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஓரினச்சேர்க்கை குறித்து வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி எவரும் புகார் அளிக்காததால் சுமார் ஆறு மாத காலமாக இதை தந்திரத்தை பயன்படுத்தி பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்தது ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் இதில் சிக்கிய இருவர் மீது கஞ்சா உள்ளிட்ட ஆறு வழக்குகள் சிவகிரி காவல் நிலையத்தில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் தடை செய்யப்பட்ட செல்போன் செயலிகள் மூலமாக இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால், அல்லது தகவல் தெரிந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு காவல்துறை தரப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது, ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அடித்து துன்புரித்தி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்திருப்பதுடன், கத்திகளுடன் காரும், பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் புளியங்குடி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ