spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பணம் கேட்டு கள்ளக்காதலி டார்ச்சர்…வாலிபரின் விபரீத முடிவு

பணம் கேட்டு கள்ளக்காதலி டார்ச்சர்…வாலிபரின் விபரீத முடிவு

-

- Advertisement -

திருப்பத்தூரில் தினமும் பணம் கேட்டு டார்ச்சர் வாலிபர் தற்கொலை, மோசடி செய்த பெண்ணை கைது செய்யாத போலீசாரை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை.பணம் கேட்டு கள்ளக்காதலி டார்ச்சர்…வாலிபரின் விபரீத முடிவு திருப்பத்தூர் மாவட்டம் ,கௌதமபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கௌரவன் மகன் சுரேஷ் (32) இவர் தனியாருக்கு சொந்தமான கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையெடுத்த மடவாளம் அடுத்த காளத்தீயூர் பகுதியை சேர்ந்த முனிசாமி மகள் சங்கீதா (30) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் சுரேஷிடம் ஆசை வார்த்தை பேசி பணம் மற்றும் நகை ஆகியவற்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் தினமும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டு சுரேஷை டார்ச்சர் செய்து ஒன்று பணம் கொடு அல்லது என் வழியில் விடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ ஒதுங்கி போ, அல்லது செத்து விடு என கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் கடந்த 05.02.25 அன்று, இந்த பெண்ணால்  தினம், தினம் சித்திரவதை எனவே ஓரே அடியாக தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும், என்னுடைய மரணத்திற்கு காரணம் சங்கீதா தான். அவரை விட்டு விடாதீர்கள் என கூறி தற்கொலை செய்வதற்கு முன்பு தூக்கு கயிறுடன் வீடியோ எடுத்து பதிவு செய்து பின்பு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சுரேஷின் உறவினர்கள் அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் அளித்து உள்ளனர்.

we-r-hiring

ஆனால் இதுவரை போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் சுரேஷின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பீகார் கொள்ளையர்கள்… பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை!

MUST READ