வேலூரில் தனியார் பள்ளியில் (வேலம்மாள் போதி கேம்பஸ்) மாணவர்கள் செலுத்திய ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் கல்வி கட்டணத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் கைது.வேலூர் தொரப்பாடி எழில்நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகரை சேர்ந்த செல்வி (வயது 41) கடந்த 2017 ஆம் ஆண்டு தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர் காசாளர் (வேலம்மாள் போதி கேம்பஸ்) பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்தை செல்வி பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது வழங்கி, மறுநாள் அந்த பணத்தை சென்னையில் உள்ள பள்ளியின் அலுவலக வங்கிக்கணக்கில் வரவு வைப்பது வழக்கம்.
ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 3 – ம் தேதி வரை மாணவர்களின் கல்வி கட்டண ரசீது மற்றும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது.இதையடுத்து சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் தணிக்கை குழுவினர் வேலூரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டண ரசீது, வங்கியின் வரவு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ததில் காசாளர் செல்வி, மாணவர்களின் கல்வி கட்டணம் ரூ.26 லட்சத்து 90 ஆயிரத்துக்கு 127 க்கு ரசீதுகள் வழங்கி விட்டு அதனை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரிய வந்துள்ளது.
https://www.apcnewstamil.com/news/cinema-news/indian-2-movie-neelorpam-song-out-now/88123
இதுகுறித்து தணிக்கை குழுவினர் செல்வியிடம் விசாரணை நடத்தி, கையாடல் செய்த பணத்தை விரைவாக செலுத்தும்படி கூறியுள்ளார்கள். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் (ரதிகுமாரி) வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.இதையடுத்து குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பள்ளியில் காசாளராக பணிபுரிந்த செல்வி, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தனது வங்கிக்கணக்கு எண்ணை கொடுத்து அதன்மூலம், பள்ளியில் செலுத்திய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைக்காமலும் ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் கையாடல் செய்ததும், அந்த பணத்தில் சுற்றுலா சென்றதும், வாங்கிய கடனை அடைத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர்.