spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மனைவி அடித்ததில் கணவர் மரணம்

மனைவி அடித்ததில் கணவர் மரணம்

-

- Advertisement -

மனைவி அடித்ததில் கணவர் மரணம்

பழனி அருகே பருத்தியூரில் குடும்ப பிரச்னையில் மனைவி அடித்ததில் 70 வயதுடைய கணவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

we-r-hiring

பழனி அருகே வட பருத்தியூர் கிராமம் உள்ளது. தோட்டத்து வீட்டில் விவசாயி நாட்டுதுறை (73) மனைவி கருப்பாத்தாள் (65) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர் சொந்தமாக ஆடு வைத்து தொழில் நடத்தி நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் கணவர்- மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் நாட்டுதுறை அருவாளை எடுத்துக்கொண்டு மனைவி கருப்பாத்தாளை வெட்ட முயற்சி செய்துள்ளார்.

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

அப்போது அருவாளை பிடுங்கி மனைவி கருப்பாத்தாள் கணவர் நாட்டுதுறையை தாக்கியுள்ளார். அப்போது நாட்டு துறையின் தலையில் காயம் பட்டு சம்பவ இடத்திலேயே முதியவர் நாட்டு துறை உயிரிழந்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு சென்ற கீரனூர் போலீசார் கருப்பாத்தளை கைது செய்தனர். மேலும் போலீஸாரின் விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வரும் இருவருக்கும் இடையே தினந்தோறும் சண்டை நடந்து வந்ததும், மதுபோதையில் வந்த நாட்டுத்துரை மனைவியிடம் தகராறு செய்து அறிவாளால் வெட்ட வந்த போது மனைவி கருப்பாத்தாள் அரிவாளை பிடுங்கி வெட்டியதும் தெரியவந்தது. முதியவர் நாட்டுதுறை உடலை கைப்பற்றிய போலீஸார் பிரோத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

MUST READ