spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

-

- Advertisement -

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரின் மனைவி மெர்லின் டயானா (36). இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய குளத்தில் உள்ள தனியார் காலேஜீல் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
கழுத்தில் இருந்த தங்க ஜெயினை பறித்த மர்ம மனிதர்

தற்போது  மெர்லின் டயானா காலேஜ் விடுமுறை என்பதால்  ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் அங்கிருந்து ஜெனிஸ் மற்றும் மெர்லின் டயானா இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

we-r-hiring

மார்த்தாண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள் திடீரென்று மெர்லின் டயானா கழுத்தில் இருந்த தங்க ஜெயினைப் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஜெயினைப் பிடித்துக் கொண்டு சத்தமிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று ஓடினர்.

இதற்கிடையில் மெர்லின் டயானாவின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறுவனத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். அவர்கள் மர்ம மனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை.

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தங்க ஜெயின் பறிப்பு

இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினரிடம் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக காவல் துறையினர் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்பொழுதும் பரபரப்பாக இருந்து காணப்படும் மார்த்தாண்டம் நகரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ