Homeசெய்திகள்க்ரைம்காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

-

- Advertisement -

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியை சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்த வருகிறார். அவரது மனைவி ராதா, மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார்.

தாஸ் பிரகாஷ் குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 25 சவரன் நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த தாஸ் பிரகாஷ் காஞ்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுகா போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக வெளியூர் சென்று இருந்த போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி

MUST READ