Homeசெய்திகள்க்ரைம்மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை

மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை

-

- Advertisement -

மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை செய்ததில் நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.மதுரை:ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்…தீவிர வேட்டையில் தனிப்படை

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்துவருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான சுந்தர்.  மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்திவருகிறார்.

இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது. இதனிடையே சுந்தருக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் அளவிலான நிலம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்துள்ளது.

சுந்தரின் எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 14 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தருடன் அவரது கடை ஊழியர்கள் இருந்த போதும் பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்வதாக கூறி சுந்தரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் இரவு ஆகியும் சுந்தர் திரும்பாத நிலையில் சுந்தரை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திசென்றதாகவும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர். சுந்தரின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்கள் மற்றும் வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தி தற்போது 9 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் பிடித்து உள்ளனர்.

மேலும் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.  சுந்தரை கடத்திய நபர்களின் செல்போன் எண் வடமாநில பகுதியில் இருப்பதும் தெரியவந்துள்ளதால் சுந்தரை மீட்பதற்காக தனிப்படை காவல்துறையினர் வடமாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.

கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை – உடலை வாங்க மறுத்த சக மாணவிகள்

MUST READ