spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!

பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!

-

- Advertisement -

பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சிவகுமார் திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி விஜயகுமாரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை சிவகுமார் கண்டித்ததன் காரணமாக கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் அந்த பகுதியில் கார் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அவரின் தூண்டுதலின் பேரில் ரவுடி லால் பிரகாஷ் இந்த கொலையை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலிப்படை தலைவனாக இருக்க கூடிய ரவுடி லால் பிரகாஷ் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது. லால் பிரகாஷ் கல்லூரி மாணவன் மோகன் (20) என்பவரை அழைத்துக் கொண்டு இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். தொழில் போட்டியால் கொலை என்று விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ் தொடர்ந்து கூறி வந்த நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொடிவேரி அணைக்கு செல்ல தடை…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

we-r-hiring

MUST READ