Homeசெய்திகள்க்ரைம்சொத்து தகராறு - தாயை கொலை செய்ய முயற்சி

சொத்து தகராறு – தாயை கொலை செய்ய முயற்சி

-

- Advertisement -

சென்னையில் சொத்து தகராறில் தாயை கொடூரமாக தாக்கிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு - தாயை கொலை செய்ய முயற்சி

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(64). இவருக்கு திரிலோக சுந்தரி(43) என மகள் உள்ளார். ஆதிலட்சுமிக்கும் அவரது மகள் திரிலோக சுந்தரிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி வீட்டு அருகே அமர்ந்திருந்த போது அங்கு வந்த அவரது மகள் திரிலோக சுந்தரி தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறும் இல்லையெனில் அதற்குண்டான பணத்தையாவது தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து திரிலோக சுந்தரி தனது தாய் முத்துலட்சுமி முடியை பிடித்து இழுத்து அடித்து அருகில் இருந்த கையிற்றை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

சொத்து தகராறு - தாயை கொலை செய்ய முயற்சிஇதில் காயமடைந்த முத்துலட்சுமி கேகே நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இச்சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.‌ இதற்கிடையே முத்துலட்சுமியை அவரது மகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சொத்துக்காக தாயை கொலை செய்ய முயன்ற மகள் திரிலோக சுந்தரி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நடுக்காட்டுக்குள் உடைகளை கழற்றி, குழி தோண்டி புதைத்து… உயிருடன் வந்த யோகா டீச்சர்

 

MUST READ