spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆன்லைன் ரம்மியால் இழந்த ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?

ஆன்லைன் ரம்மியால் இழந்த ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?

-

- Advertisement -

ஆன்லைன் ரம்மியில், 10 லட்சம் ரூபாயை இழந்த, தனியார் வங்கி துணை மேலாளர், மோகனூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

ஆன்லைன் ரம்மியால் இழந்த  ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?

we-r-hiring

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளையின் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு கவிதா (22) என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். ஆன்லைன் ரம்மியில் விளையாடிய ஜெயகுமார், அதில், 10 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து தனது மனைவியிடம், இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த நெய்க்காரன்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி அவரது தந்தை பிறந்த ஊர். நேற்று முன்தினம் அங்கு சென்று, மாலை, 3:00 மணிக்கு, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த முதியவர் தடுத்து, அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில், தனது ஹோண்டா பேஷன் பிரோ பைக்கிள், நெய்க்காரப்பட்டி பாண்டியன் நகர் ரயில்வே டிராக்கிற்கு ஜெயக்குமார் வந்துள்ளார். அங்கு, தனது பைக்கை நிறுத்திவிட்டு, ரயிலுக்காக காத்திருந்தார். நேற்று மாலை, 3:00 மணிக்கு, சேலம் – மயிலாடுதுறை சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இரண்டாக துண்டானது.

தகவல் அறிந்த, சேலம் ரயில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோகனூர் போலீசாரும் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனா். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் வங்கி துணை மேலாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலம் பணம் இழந்த நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இட ஒதுக்கீட்டில் அநீதி: ஓபிசி-யினருக்கு வருமான வரம்பை ரூ. 16 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ