spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மகளிர் விடுதியில் ரகசிய கேமிரா!! காதலனுடன் சிக்கிய வட மாநில பெண்…

மகளிர் விடுதியில் ரகசிய கேமிரா!! காதலனுடன் சிக்கிய வட மாநில பெண்…

-

- Advertisement -

ஓசூர் அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விடுதியில் ரகசிய கேமரா வைத்தது தொடர்பாக பெண் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனா்.மகளிர் விடுதியில் ரகசிய கேமிரா!! காதலனுடன் சிக்கிய வட மாநில பெண்…கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவன தொழிற்சாலைக்கு சொந்தமான விடியல் ரெசிடென்சி என்ற பெண்களுக்கான தங்கும் விடுதி இயங்கி வருகிறது. 11 மாடிகளை கொண்ட எட்டு கட்டிடங்களில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த விடுதியில் உள்ள ஒரு அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கேமரா வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விடுதி நிர்வாகத்தை கண்டித்தும் தொடர்ந்து மூன்று நாட்களாக அங்குள்ள ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

we-r-hiring

இதற்கிடையில் கேமராவை வைத்த அதே அறையில் இருந்த  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுக்குமாரி குப்தா என்ற பெண் தொழிலாளியை கேமரா வைத்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பராண ரவி பிரதாப் சிங் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதனை அடுத்து டெல்லியில் பதுங்கி இருந்த நீலுக்குமாரி குப்தாவின் ஆண் நண்பரான ரவி பிரதாப் சிங்கை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து விமான மூலம் ஓசூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேமரா வைத்ததற்கு உடந்தையாக இருந்ததாக தெரியவந்தது. மேலும் விசாரணையில் கேமராவில் இருந்த வீடியோ பதிவுகள் எதுவும் சமூக வலைதளங்களில் பரப்பவில்லை என இதுவரை தெரிய வருகிறது என மாவட்ட எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளாா்.

நூதன முறையில் திருடிய கும்பல் கைது.!! தலைமறைவான பெண்ணுக்கு வலைவீச்சு!!

 

MUST READ