Homeசெய்திகள்க்ரைம்சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டி கைது

-

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டி கைது

வண்டலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த செக்யூரிட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது

சென்னை வண்டலூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர்கள் பெத்தராஜ்- சரண்யா தம்பதிகள். இவர்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் கேன் விற்பனை செய்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் எட்டு வயது மகள் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் சேலத்தை சேர்ந்த எழில் பாஷா (42)பேச்சு கொடுப்பது போல் தனி அறைக்கு கூட்டி சென்று கட்டாயபடுத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் கூச்சலிட்டபடி அழுது கொண்டே சென்ற சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா, உடனடியாக கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எழில் பாஷாவை கைது செய்து நடத்திய விசாரணையில் சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புகொண்டதை அடுத்து போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்த போலீசார் எழில் பாஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ