திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில தம்பதியரின் 3 வயது குழந்தை, மர்ம நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தைக்கு முதலில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், பிபின் மஞ்சி உள்ளிட்ட 4 பேர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
