Homeசெய்திகள்க்ரைம்இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைது

இளம்பெண் தற்கொலை முயற்சி – 3 பேர் கைது

-

- Advertisement -

இளம்பெண் தற்கொலை முயற்சி – 3 பேர் கைது

ஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததால் மனம் உலைச்சலில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெண் youtube நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைது

Veera talks double x என்ற யூடியூப் சேனல் மூலமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீடியோ ஜாக்கி சுவேதா தனது சேனல் ஒளிப்பதிவாளர் உடன் சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய பிரபல மால் அருகே சாலையில் செல்லக்கூடிய இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் காதல் குறித்து பேட்டி எடுத்துள்ளார்.

அந்த வகையில் 23 வயது கொண்ட இளம் பெண் ஒருவரிடம் காதல் குறித்து பேட்டி அளிக்குமாறு பேச சொல்லி கேட்டுள்ளனர். அந்த பெண்ணும் பேசி உள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக ஆபாசமான கேள்வி ஒன்றை வீடியோ ஜாக்கி சுவேதா கேட்டதும் இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு தனது வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்யக்கூடாது என கூறியுள்ளார். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லி கேட்டுள்ளார்.

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைது

ஆனால் உன்னுடைய விடியோ என தனியாக டெலிட் செய்ய முடியாது மொத்தமாக டெலிட் ஆகிவிடும் உன்னுடைய அனுமதியில்லாமல் பதிவேற்றம் செய்யமாட்டோம் என பேட்டி கொடுத்த இளம் பெண்ணை நம்பவைத்துள்ளனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த இளம்பெண்ணின் அனுமதியின்றி அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டி கேட்கப்பட்ட ஆபாசமான கேள்வி அடங்கிய வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்திலும் முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைது

அந்த வீடியோ குறித்து தனது தோழிகள் மூலம் தகவல் அறிந்த பேட்டி கொடுத்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்து விடியோவை பார்த்த போது ஏராளமானோர் பேட்டி கொடுத்த பெண் குறித்து அவதூறு கருத்துகளால் கமென்ட் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான 23 வயது இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் மீட்டு கீழ்ப்பக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைது

இந்நிலையில் இளம்பெண் அளித்த புகார் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார் Veera double x Android YouTube channel உரிமையாளர் ராம் 23, ஒளிப்பதிவாளர் யோகராஜ் 21, வீடியோ ஜாக்கி ஸ்வேதா 23 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கீழ்ப்பாக்கம் போலீசார் யூடியூப் சேனலில் உரிமையாளர் ராம், யோகராஜ், ஸ்வேதா ஆகியோரை கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைது

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் தந்தையை இழந்த நிலையில் தனது அண்ணனின் உதவியுடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ