இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு மோசடி செய்து காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து நபர் கைது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவாக வேலை செய்து வரும் அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
இவர் கடந்த 2014ம் ஆண்டு திருவள்ளூர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது இவருடன் படித்த, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமார் ( தற்போது வயது 28) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது . கடந்த 2023 ஆம் ஆண்டு, இரண்டு லட்சம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது என இளம் பெண்ணிடம் அஜித் குமாா் கேட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என்று இளம்பெண்ணும். இன்கிரிப் பைனான்ஸ் மூலம் இரண்டு லட்சம் லோன் எடுத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் இளம் பெண்ணுக்கு தெரியாமல், கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூர் ஓயமங்கலம் மாரியம்மன் கோயிலில் வேறொரு பெண்ணுடன் அஜித்குமாருக்கு திருமணம் நடந்துள்ளது.
சமீபத்தில் தான் அஜித் குமாருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது என இளம் பெண்ணுக்கு தான் ஏமாற்றப்ட்டுள்ளோம் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ,ஆபாசமாக சட்டம், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்துள்ளனா்.
சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் – மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு