உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட பிவி கோவில் தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் கடந்த 6-ம் தேதி அன்று வீட்டு வாசலில் ஆர்15 வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்
மறுநாள் காலை வந்து பார்க்கும்போது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அருகாமையில் இருக்கக்கூடிய சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில் முகம் மறைத்த நிலையில் யாரோ ஒரு நபர் குமாரின் வாகனத்தை எடுத்துச் செல்வது தெரிந்த நிலையில் உதவி ஆணையரின் தனிப்படையினர் அந்த சிசி டிவி காட்சியை பார்த்ததில் அது சுனாமி குடியிருப்பை சேர்ந்த சஜார் எனப்படும் சாய்ராம் (22) என்பது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து சுனாமி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த சஜாரை கைது செய்தது மட்டுமில்லாமல் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இவரது கூட்டாளிகள் பலர் சோழவரம் பகுதிகளில் இரு சக்கர வாகனத்தை திருடியதும் இவரது கூட்டாளிகளை சோழவரம் போலீசார் கைது செய்து இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் அனைவரும் உயர்ரக வாகனங்களை மட்டுமே குறி வைத்து திருடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.