spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

-

- Advertisement -

 

கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

we-r-hiring

கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது வாகனத்தை மேம்பால தடுப்புச் சுவர் ஓரம் நிறுத்திவிட்டு, 30 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கூச்சலிட்டவாறு காப்பாற்ற முயல்வதற்குள் கீழே குதித்த அந்த இளைஞர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புனித தோமையர் மலை காவல் நிலைய போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்

போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ராஜா (23) என தெரியவந்துள்ளது.

MUST READ