Homeசெய்திகள்மாவட்டம்வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு - ஆனைமலை புலிகள் காப்பகத்தில்...

வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!

-

- Advertisement -

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை கடுமையான வயிற்று வலி காரணமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு - ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!

​ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை – பச்சைத் தண்ணீர் சுற்றுப் பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகரூத்து என்ற இடத்தில் ஆண் குட்டி யானை ஒன்று விழுந்த நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ​இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று வனக்கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் இறந்த யானைக்கு உடற்கூறாய்வு (Post-mortem) செய்யப்பட்டது. இன்று வெளியிடப்பட்டுள்ள அதன் மருத்துவ அறிக்கையில், “உயிரிழந்த யானைக்குச் சுமார் 1 வயது இருக்கும் என்றும், அதன் பெருங்குடலில் ஏற்பட்ட திடீர் அடைப்பு காரணமாகக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அந்த யானை உயிரிழந்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!

we-r-hiring

MUST READ