Homeசெய்திகள்மாவட்டம்4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி...

4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி கிராம மக்கள் குமுறல்!

-

- Advertisement -

மாற்றத்திற்கான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, தங்களது கிராமத்திற்கு ஒரு பேருந்து வசதி கூட செய்து தரவில்லை என்று சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி கிராம மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்லும் அவல நிலை அங்கு நீடித்து வருகிறது.4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி கிராம மக்கள் குமுறல்!

​​சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது வேங்கைபட்டி கிராமம். இக்கிராமம் சிங்கம்புணரியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், பிரான்மலையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் இருந்து, 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்விக்காகச் சிங்கம்புணரி மற்றும் பிரான்மலையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.

we-r-hiring

​பாதுகாப்பற்ற பயணத்தில் பெண் குழந்தைகள்
வேங்கைபட்டி கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. இதனால் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ​பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டும் என்பதால், குழந்தைகள் அனைவரும் தினமும் கிலோமீட்டர் கணக்கில் நடந்தே செல்கின்றனர். இல்லையெனில், சாலைகளில் வரும் முகம் தெரியாத வாகன ஓட்டிகளிடம் ‘லிப்ட்’ கேட்டு ஆபத்தான முறையில் பயணிக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக, பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பெண் குழந்தைகள் முகம் தெரியாத நபர்களின் இருசக்கர வாகனங்களில் ஏறிச் செல்வது, இந்த காலகட்டத்தில் தங்களுக்கு மிகுந்த அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்துவதாகப் பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

​கிராம மக்களின் ஒற்றைக் கோரிக்கை
ஒவ்வொரு நாளும் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் தவிப்புடனே காத்திருக்க வேண்டியுள்ளது. ‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று வாக்குறுதி அளித்துவிட்டு, கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பில் இந்த அரசு அலட்சியம் காட்டுவது நியாயமல்ல என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ​எனவே, மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வேங்கைபட்டி கிராமத்திலிருந்து சிங்கம்புணரி மற்றும் பிரான்மலை ஆகிய ஊர்களுக்குக் காலை மற்றும் மாலை நேரங்களில் தடையின்றி அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

ஆதார் ஓ.டி.பி இருந்தால்தான் ஓ.பி சீட்டா?! ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி!

MUST READ