spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!

-

- Advertisement -

ஆலங்குளம் அருகே கடங்கேரி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில், அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதே நேரத்தில்,  சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது மின் கம்பம் எதிர்பாராத விதமாக  சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி  இரண்டு சிறுமிகளுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆபத்தான நிலையில் சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

we-r-hiring

அப்போது, 5 வயதான சிறுமி ஜமித்ரா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். மேலும், 9 வயது சிறுமியான பிரதிதா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறுவர்கள், சிறுமிகளை மிககவனத்தோடு பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை  – ராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ