கோவில் விழாவில் இருதரப்பு மோதல்: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.
புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்ற போது டிராக்டரில் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தது.
அப்போது பாடல் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறி டிராக்டரில் இருந்த இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்து சென்ற போது அப்போதும் சிலர் வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.