தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளின் மீது லாரி மோதியதில் மாடுகள் பலியானது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தாக்கியதில் லாரி ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தாம்பரம் முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளின் மீது அந்த பகுதி வழியாக வந்த கனரக வாகன மோதியிதில் சம்பவ இடத்திலேயே 4 மாடுகளும், 1 மாடு உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் இருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அந்த லாரி ஓட்டுனரை கடுமையாக தாக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீர்க்கங்காய் போலீசார் லாரி ஓட்டுனரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் பெயர் மணிகண்டன் என்பதும், மாடுகளின் உரிமையாளர் புருஷோத்தமன் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


