spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

-

- Advertisement -

தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகப்படியாக கடனாநதி பகுதியில் 23.9 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது. தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிப்பதற்காக வருகின்ற நிலையில் அவர்களுக்கு அனுமதி அளிக்காமல் வனத்துறை காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் சுற்றுலாவிற்கு வந்த பலரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆருத்ரா தரிசனம் : பக்தியின் பின்னே ஒளிந்திருக்கும் ஆரோக்கியமும் ரகசியமும்

we-r-hiring

 

MUST READ