தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெருஞ்சேரி பகுதியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறாா். 
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள பெருஞ்சேரி பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதனை முன்னிட்டு, ராகுல் காந்தி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்திலிருந்து, ராகுல் காந்தி சாலை மார்க்கமாக பெருஞ்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல உள்ளார். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான தூரம் சுமார் 1 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.
பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், அவர் மீண்டும் அதே தனியார் பள்ளி வளாகத்திற்கு திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சோளிங்கர் நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிகழ்வை முன்னிட்டு, ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் காவல்துறை பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் அதிக அளவில் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.
ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி
