கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலியாகினர்.
கேரளாவின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். இன்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரது காரின் டயர் பஞ்சர் ஆனது. அதன் பின்னா் பழுது நீக்கப்பட்டு காரில் சென்று கொண்டிருந்த போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, காரின் பின்பகுதியில் மோதியது.
இதில் காாிலிருந்த தீபக் (28) மற்றும் அவரது சகோதரி திவ்யா (30) இருவரும் உயிரிழந்தனா். ரவீந்திரன், ஸ்ரீ பார்வதி, வினீத், சரோஜினி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான தீபக் மற்றும் திவ்யா இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் Energy Lockdown வருகிறதா? பேருந்து, ரயில்களை பயன்படுத்த மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
