பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா். 1,000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. 1,000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். வாடிவாசலில் காளைகள் சீறி வருகின்றன.
சீறிவரும் எழும் காளைகளின் திமிலை பிடித்து காளையா்கள் அடக்குகின்றனா். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல்சுற்று நிறைவடைந்துள்ளது. முதலாவது சுற்று முடிவில் சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளை பிடித்து முன்னிலையில் உள்ளார். முதலாவது சுற்றின் முடிவில் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராம் 4 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 110 காளைகள் களம் கண்டது. இதில் 20 மாடுகள் பிடிபட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் ஒருவர் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.



