Homeசெய்திகள்மாவட்டம்"நகையைத் திருப்பிக் கொடுக்கும் வரை நகர மாட்டோம்" – 80 வயது மூதாட்டிக்காக வீட்டின் முன்...

“நகையைத் திருப்பிக் கொடுக்கும் வரை நகர மாட்டோம்” – 80 வயது மூதாட்டிக்காக வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

-

- Advertisement -

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 80 வயது மூதாட்டியிடம் வாங்கிய 3 பவுன் தங்க நகையை 4 ஆண்டுகளாகத் திருப்பித் தராத நபரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
80 வயது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் மூக்காயி (80). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சின்னமுத்துவின் மகன் ஆனந்தன் என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 3 பவுன் தங்க நகையை அவசரத் தேவைக்காக வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய நகையை 10 நாட்களுக்குள் திருப்பித் தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

we-r-hiring

நான்கு ஆண்டு ஏமாற்றம் – காவல் நிலையத்தில் புகார்:
​ஆனால், நகையை வாங்கிச் சென்ற ஆனந்தன், வாக்குறுதி அளித்தபடி திருப்பித் தராமல் கடந்த 4 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இந்த புகாரின் மீது காவல்துறை தரப்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
80 வயது

போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்:
​காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினர், தற்போது தங்களது பாணியில் நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

​நகையை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஆனந்தனின் புகைப்படத்தை அச்சிட்டு, “3 சவரன் நகையைத் திரும்பப் பெறும் வரை ஆனந்தன் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்” என்ற வாசகங்களுடன் வாழப்பாடி மற்றும் துக்கியாம்பாளையம் பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

பரபரப்பில் வாழப்பாடி:
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகம் நடமாடும் வாழப்பாடி – துக்கியாம்பாளையம் முக்கியச் சாலையோரச் சுவர்களிலும், பொது இடங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ