spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்நடக்க இயலாத முதியவரை ஜி.எச் வளாகத்தில் நிர்கதியாய் விட்டு சென்ற உறவுகள்…

நடக்க இயலாத முதியவரை ஜி.எச் வளாகத்தில் நிர்கதியாய் விட்டு சென்ற உறவுகள்…

-

- Advertisement -

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நடக்க இயலாத நிலையில் உள்ள முதியவரை அவரது உறவினர்கள் அழைத்து வந்து நிர்கதியாக விட்டு சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.நடக்க இயலாத முதியவரை ஜி.எச் வளாகத்தில் நிர்கதியாய் விட்டு சென்ற உறவுகள்…ஈரோடு மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்ற முதியவரை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் குறிப்பாக மகள் மற்றும் உறவினர்கள் காரில் ஏற்றி வந்து நேற்று இரவு ஜிஎச் வளாகத்தில் ஆதரவற்ற நிலையில் அனாதையாக இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அந்த முதியவரால் சரியாக நடக்க முடியாமலும், பேச முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில் தவித்து வந்திருக்கிறாா். இரவு முழுவதும் கொசுக்கடியில் அந்த முதியவா் மருத்துவமனை வாளகத்திலேயே படுத்திருந்திருக்கிறாா்.

மேலும், அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் சிலர் அவருக்கு உணவு மற்றும் டீ  வாங்கி கொடுத்துள்ளனர். 80 வயது மதிக்கத்த  முதியவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த குடும்பத்தினர் முறையாக மருத்துவமனையில் சிகிச்சைககாக சேர்க்காமல்,  ஆதரவற்ற நிலையில் அனாதையாக மருத்துவமனை வளாகத்தில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உறவினர்கள் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..

we-r-hiring

MUST READ